அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மழை வெள்ளம் காரணமாக கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கொதிகலனை குளிர்விப்பதற்காக அனல் நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு செல்லும் கால்வாய்க் சுவர் இடிந்து விழுந்தில் சாம்பல் உள்ளே புகுந்ததால் கடந்த ஏழு நாட்களாக மின்சாரம் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடியில் தமிழக அரசின் மின்சார வாரியத்திற்கு சொந்தமான அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது இந்த அனல் மின் நிலையம் மூலம் ஐந்து யூனிட்டுக்களில் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய ப்படுகிறது இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மழை வெள்ளத்தின் போது அனல் மின் நிலையத்திற்கு கொதிகலனை குழுர்விப்பதற்காக கடல் நீர் உள்ளே செல்லும் கால்வாய் முழுவதும் சாம்பல் உள்ளே புகுந்து கடல் நீர் உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு ஐந்து யூனிட்களிலும் மின்சார உற்பத்தி முற்றிலுமாக ஒரு மாத காலம் தடைபட்டது. இதைத்தொடர்ந்து மின்சார வாரியம் சார்பில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பல கோடி ரூபாய் செலவு செய்து புதிதாக ஒப்பந்தக்காரர்கள் மூலம் சாம்பல் உள்ளே போகாமல் தடுப்பதற்காக புதிய கால்வாய் 6 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 12 13, தேதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அனல் மின் நிலைய பகுதிகளிலும் பெய்த மழை காரணமாக புதிதாக கட்டப்பட்ட ஒன்று முதல் மூன்று யூனிட்டுகள் பகுதிக்கு கடல் நீர் உள்ளே கொண்டு செல்லும் கால்வாயில் சுவர் ஒரு பகுதியில் இடிந்து விழுந்தது. இதன் காரணமாக அந்த கால்வாயில் சாம்பல் கழிவுகள் உள்ளே புகுந்து கடல் நீர் உள்ளே கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முதலாவது இரண்டாவது மூன்றாவது ஆகிய யூனிட் களில் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டு கடந்த 15 ஆம் தேதியில் இருந்து தற்போது வரை ஒரு வார காலம் சுமார் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது தடைபட்டுள்ளது. இதன் காரணமாக மின்சார வாரியத்திற்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது இதைத் தொடர்ந்து அனல் மின் நிலைய அதிகாரிகள் சாம்பல் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்தப் பணி கால தாமதமாக நடைபெறுவதால் மின் உற்பத்தி துவங்க இன்னும் பத்து தினங்களுக்கு மேலாகும் கூறப்படுகிறது . இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டு ஆறு மாதத்திலேயே இந்த காம்பவுண்ட் சுவர் விழுந்த சம்பவம் அனல் மின் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இது குறித்தும் அனல் மின் நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.