எடப்பாடி அருகே ஏரியில் மீன் கடத்திய ட்ராக்டர் பறிமுதல்
சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஏரிகளில் தொடர்ந்து மண் கடத்தல் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எடப்பாடி அருகே செட்டி மாங்குறிச்சி ஊராட்சி பக்கநாடு புதிய ஏரியில் ஜேசிபி வாகனம் கொண்டு டிராக்டர்களில் செம்மண் கடத்தப்படுவதாக சேலம் மாவட்ட சுரங்க புவியியல் துறை அலுவலகத்திற்கு தகவல் வந்ததை அடுத்து சுரங்க பூவியில் துறை உதவி ஆய்வாளர் அரவிந்த் அலுவலர்களோடு அக்டோபர் 1ஆம் தேதி இரவு 11 மணியளவில் செட்டி மாங்குறிச்சி அம்மன் கோவில் பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக செம்மண் ஏற்றுக் கொண்டு வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி உள்ளனர் அதிகாரிகளைக் ஓட்டுனர் டிராக்டரை வழியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி ஏரியிலிருந்து மண் கடத்தி வந்தது தெரியவந்ததை தொடர்ந்து அனுமதியின்றி செம்மண் கடத்திய ட்ராக்டரை பறிமுதல் செய்து எடப்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எடப்பாடி போலீசார் மண் கடத்திய ட்ராக்டரை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.