நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விருக்க்ஷா குளோபல் பள்ளியும் ரோட்டரி சங்கமும் இணைந்து மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை இன்று நடத்தினர். அக்டோபர் மாதம் புற்றுநோய்க்கான விழிப்புணர்வு மாதம் இதனை முன்னிட்டு திருச்செங்கோடு விருக்க்ஷா குளோபல் பள்ளி மற்றும் ரோட்டரி இன்னர் வீல் சங்கங்கள் இணைந்து மார்பக புற்று நோய்க்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் பெண்கள் பிங்க் நிற சேலை அணிந்து வந்தனர். பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய பேரணியை திருச்செங்கோடு நகர மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு தொடங்கி வைத்தார். 2.5 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற பேரணி பழைய சேலம் ரோடு, பழைய பேருந்து நிலையம், சங்ககிரி சாலை , புதிய சேலம் ரோடு, வழியாக மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. இதில் கலந்து கொள்ளும் பெண்கள் ஒவ்வொருவரும் 236 ரூபாய் நன்கொடையாக வழங்குகிறார்கள். இந்த நன்கொடையை வைத்து மார்பக புற்றுநோய் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வாக்கத்தானில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்க தலைவர் கவின்ராஜ், செயலாளர் சசிகுமார், ரோட்டரி சங்க உதவி கவர்னர் ஹரி நிவாஸ், திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் மோகன பானு, உறுப்பினர் தினேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் காலை உணவு வழங்கப்பட்டது.