பல்லடத்தின் புதிய அடையாளம்

புதிய மால் திறப்பு விழா

Update: 2024-10-07 06:34 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பல்லடத்தில் கோவைக்கே சவால் விடப்போகும் 2.60 லட்சம் சதுர அடியில் ரெடியான பிரம்மாண்டமான 'மால்' ஐந்து சினிமா தியேட்டர்கள், உணவகங்களுடன் ரெடியாகி உள்ளது. பல்லடத்தின் முதல் ஷாப்பிங் மால், ஆர்னோதயா மால் திறப்பு விழா நடைபெற்றது. பல்லடம் மாணிக்காபுரம் சாலையில் சுமார் 2.60 லட்சம் சதுரடியில் மிகவும் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. இந்த ஷாப்பிங் மால் சினிமா பார்க்க விரும்புவோருக்கு அற்புதமான அனுபவமாக இருக்கும்.மொத்தம் 5 திரையரங்குகளைக் கொண்ட மல்டி பிளக்ஸ் திரையரங்க வசதி அமைக்கப்பட்டுள்ளது.இதில், 2 திரையரங்குகள் PLF (Premium Large Format) திரையரங்குகளாக உள்ளது. இதேபோல் ஷாப்பிங் செய்ய வருவோருக்காக பெரிய மால்களில் உள்ளது போன்ற புட் கோர்ட்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆர்னோதயா மாலில் 300 இருக்கைகள் கொண்ட புட் கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு வகையான உணவகங்கள் இடம் பெற உள்ளது. இந்த ஷாப்பிங் மாலில் 200 மீட்டர் நீளமுள்ள சர்வதேச தரம் வாய்ந்த ஸ்கேட்டிங் ரிங்க், 2 டர்ஃப் கோர்ட்டுகளும் (Turf Court) அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஆர்னோதயா மாலில் 800 கார்கள் மற்றும் 600 மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி அமைக்கப்பட்டுள்ளது.திறப்பு விழாவில் முன்னாள் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் ஸ்ரீ சக்தி சுப்பிரமணியம் உஷா திரையரங்க உரிமையாளர் ரவி அருணோதயா மால் உரிமையாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News