திருப்பூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூ, பழங்கள் மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனை களை கட்டியது!
திருப்பூரில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூ, பழங்கள் மற்றும் பூஜைப் பொருட்களின் விற்பனை அமோகம். இதனால் கடைவீதி மற்றும் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது.
திருப்பூர், ஆயுதபூஜையை முன்னிட்டு திருப்பூரில் பூ, பழங்கள் மற்றும் பூஜைப்பொருட்களின் விற்பனை படுஜோராக நடந்தது. இதன் காரணமாக கடை வீதிகள் மற்றும் மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழக முழுவதும் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வரும் வெள்ளி, சனிகிழமைகளில் வெகு சிறப்பாக கொண்டாடவுள்ள நிலையில் பூஜைக்கு முக்கிய தேவையான பூக்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி தினசரி பூ மார்க்கெட்டில் பொதுமக்கள் கூட்டமானது அதிகரித்து காணப்பட்டது.அத்துடன் இன்றைய தினம் பூஜைக்கான பூக்களின் விலையும் அதிகரித்து உள்ளது. அந்த வகையில் மல்லி கிலோ 700 முதல் 850 ரூபாய் வரையிலும் முல்லைப் பூ கிலோ 480 ரூபாய்க்கும் செவ்வந்தி கிலோ 250 இல் இருந்து 320 ரூபாய் வரையிலும் சம்பங்கி கிலோ 280 ரூபாய்க்கும், ஜாதிமல்லி 400, அரளி 500, கொழிக்கொண்டை 80 ரூபாய்க்கும்விற்பனையாகி வருகிறது. இந்த பூக்கள் அனைத்தும் நிலக்கோட்டை, சத்தியமங்கலம், ஆண்டிப்பட்டி, நாம்மக்கல், ராயக்கோட்டை, பொம்முடி, ஆந்திர மாநிலம் குப்பம், ஓசூர் உள்ளிட்ட பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூஜைக்கு தேவையான பொருட்களும் வாழைக்கன்று, பொரி, பழங்கள் உள்ளிட்ட பிற பொருள்களின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. விலை அதிகரித்து காணப்பட்டாலும் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கில் ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் பூஜை பொருட்கள் மற்றும் பூக்களை வாங்க ஆர்வம் காட்டி வருவதால், கடைவீதிகள் மற்றும் பூ மார்க்கெட்டில் பொதுமக்களின் கூட்டமானது அதிகரித்து காணப்படுகிறது.