தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

தீயணைப்பு துறை சார்பில் பேரிடர் மேலாண்மை பயிற்சி

Update: 2024-10-11 08:32 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் முதல் தகவல் பணியாளர்களுக்கு திருச்செங்கோடு தீயணைப்புத்துறை சார்பில் வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வழங்கப்பட்டது. வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி, வட்டாட்சியர் விஜயகாந்த் ஆகியோர் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு தீயணைப்பு நிலைய அலுவலர் கரிகாலன் தலைமையிலனா தீயணைப்பு வீரர்கள் மழைக்காலங்களில் ஆறு மற்றும் ஏரி பகுதிகளில் பாதிப்பு ஏற்படும் போது எவ்வாறு காப்பாற்றுவது எவ்வாறு முதலுதவி செய்வது செய்வது என செயல்முறை விளக்கம் காண்பிக்கப்பட்டது பின்னர் காஸ் சிலிண்டர்களால் ஏற்படும் தீ விபத்துகளில் எவ்வாறு காத்துக் கொள்வது மற்றும் பேரிடர் காலங்களில் ஆபத்து ஏற்படும்பொழுது எவ்வாறு செயல்பட வேண்டும் என செயல்முறையுடன் விளக்கம் அளிக்கப்பட்டது

Similar News