ஆலங்குடியில் ஆடைகளுக்கு தீ வைத்து கொளுத்திய இளைஞர் கைது
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே ஆயத்த ஆடையகத்தை தீயிட்டு எரித்த வழக்கில், இளைஞரை போலீஸார் கைது செய்தனர். ஆலங்குடி அருகேயுள்ள அணவயலைச் சேர்ந்தவர் பாஸ்கர் (42). இவர், புளிச்சங்காடு கைகாட்டியில் வாடகைக் கட்டடத்தின் முதல் தளத்தில் ஆயத்த ஆடையகம் நடத்தி வருகிறார். அந்தக் கடை கடந்த ஆக. 29-ஆம் தேதி இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், கடையில் இருந்த ஜவுளிகள், கடையின் சிசிடிவி கேமரா மற்றும் அது தொடர்புடைய சாதனங்கள் தீயில் எரிந்து நாசமாகின. மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக கூறப்பட்டது. இதுகுறித்து வடகாடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் கொண்ட வன்தட்டை (ஹார்டு டிஸ்க்) பழுதுநீக்கி ஆய்வு செய்ததில், மர்மநபர் ஒருவர் ஜவுளிக்கடையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துச் சென்றது தெரியவந்தது.