ஆலங்குடி ஆபிஸ் தெருவை சேர்ந்த பள்ளி மாணவி அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்த மாணவியை காணவில்லை. அவரை அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காத காரணத்தினால் ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆலங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.