மனநோயாளியை சுத்தம் செய்து சிகிச்சைக்கு அனுப்பிய சமூக ஆர்வலர்
மருந்தாளுநர் ரஞ்சித்குமார், காவல்துறையினர் உதவியுடன் வாலிபரை மீட்டு சுத்தம் செய்து மாற்று உடை அணிவித்து அவரது எதிர்கால நலன் கருதி பெரியகுளம் அரசு மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்துவிடப்பட்டார்
மனநோயாளியை சுத்தம் செய்து சிகிச்சைக்கு அனுப்பிய சமூக ஆர்வலர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் க.விலக்கு-வருசநாடு செல்லும் சாலையில் சுமார் 23வயது மதிக்கத்தக்க ஆண் மனநலம் பாதிக்கப்பட்டு அழுக்கு துணியுடன் துர்நாற்றத்துடன் சுற்றி திரிந்தார். ம.சுப்புலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார், காவல்துறையினர் உதவியுடன் வாலிபரை மீட்டு சுத்தம் செய்து மாற்று உடை அணிவித்து அவரது எதிர்கால நலன் கருதி பெரியகுளம் அரசு மனநல சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைக்காக சேர்த்துவிடப்பட்டது. இந்த நிகழ்வு பொதுமக்களிடையே மிகவும் பாராட்டினைப் பெற்று வருகிறது.