அதிமுக ஆண்டு விழா

ஆரணி, அக் 17. ஆரணி ஒன்றிய, நகர பகுதியில் அதிமுக ஆண்டு விழா முன்னிட்டு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Update: 2024-10-17 15:54 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆரணி ஒன்றிய, நகர பகுதியில் அதிமுக ஆண்டு விழா முன்னிட்டு வியாழக்கிழமை எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. ஆரணி ஒன்றியம். ஆரணி தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் அதிமுக கட்சியின் 53வது ஆண்டு விழா முன்னிட்டு ஆரணி அடுத்த அக்கூர் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் தெற்கு ஒன்றியசெயலாளர் ஜி.வி.கஜேந்திரன் தலைமை தாங்கினார். பேரவை மாவட்டசெயலாளர் பாரி பி.பாபு, ஒன்றிய செயலாளர்கள் ஜெயப்பிரகாசம், திருமால், நகரசெயலாளர் அசோக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெ.சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மேலும் இதில் பையூர் ஊராட்சித் தலைவர் சரவணன், நிர்வாகிகள் சித்தேரி ஜெகன், இரும்பேடு வேலு, மாமண்டூர் சுப்பிரமணி, கோபி,காட்டேரி தனசேகர், மாமண்டூர் முத்து, பார்த்திபன், அக்கூர் ராஜி, ஞானபிரகாஷ், குப்புசாமி, காமராஜ், வடுகசாத்து செல்வம், பரசுராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆரணி நகரம். ஆரணி நகரத்தில் பழையபஸ்நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் அதிமுக ஆண்டு விழா முன்னிட்டு மாவட்டஅவைத்தலைவர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார். மேலும் அதிமுக கட்சியின் கொடியேற்றப்பட்டது. இதில் பேரவை மாவட்டசெயலாளர் பாரி பி.பாபு, நகரசெயலாள் அசோக்குமார்,ஒன்றியசெயலாளர்கள் ஜி.வி.கஜேந்திரன், க.சங்கர், ஜெயப்பிரகாசம், திருமால், மாவட்ட இளைஞரணி நிர்வாகி ஏ.ஜி.ஆனந்தன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெ.சம்பத், மீனவரணி மாவட்ட செயலாளர் ஆனந்தன், நகரமன்ற உறுப்பினர்கள் சுதாகுமார், விநாயகம், பாரதிராஜா, சதீஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். இதேபோல் ஆரணி-சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Similar News