இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணங்கள்
இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இலவச திருமணங்கள்
திருச்செங்கோட்டில் இந்துசமயஅறநிலையத்துறை சார்பில் ஒன்பது இணைகளுக்கு இலவசதிருமணங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் தமிழ்நாடு சட்டப்பேரவை 2024 2025 மானியக்கோரிக்கை அறிவிப்பு எண். 27- ல் பொருளாதாரத்தில் பின்தங்கிய 700 இணைகளுக்கு இவ்வாண்டு திருக்கோயில்களின் சார்பில் இலவசத் திருமணம் நடத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்து சமய அறநிலையத்துறை ஈரோடு இணை ஆணையர் மண்டலத்தில் ஈரோடு மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் மொத்தம் 35 இணைகளுக்கு இலவச திருமணம் நடத்திட உத்தேசிக்கப்பட்டு வரப்பெற்ற விண்ணப்பங்களை பரிசீலித்து, அவற்றில் தகுதியான 35 இணைகள் தேர்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தேர்வு செய்யப்பட்ட 9 இணைகளுக்கு இலவசத் திருமணங்கள் அருள்மிகுஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் நடைபெற்றது நிகழ்ச்சியில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன், நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் திருமணங்களை நடத்தி வைத்தனர். நிகழ்ச்சியில் ஈரோடு மண்டல இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நந்தகுமார்,திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணி காந்தன்,நாமக்கல் உதவி ஆணையர் சாமிநாதன் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் சுகந்தி அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, உறுப்பினர்கள் கார்த்திகேயன்,அருணா சங்கர், பிரபாகரன், அர்ஜுனன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், லாவண்யா ரவி, எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர் கொங்கு கோமகன் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இலவசத்திருமணத்தில் பங்கேற்கும் 9 இணைகளுக்கும் திருக்கோயில்களின் சார்பாக 4 கிராம் தங்கத்தாலி மணமகன் மற்றும் மணமகளுக்கு புத்தாடைகள் பீரோ இரும்புகட்டில் மெத்தை, பாய். தலையனை கிரைண்டர் மிகசி குத்துவிளக்கு பூஜைப்பொருட்கள் மற்றும் பாத்திரங்கள். கைக்கடிகாரங்கள் மணமக்கள் உறவினர்கள் தலா 20 நபர்களுக்கு திருமண விருந்து உட்பட ரூ.60,000/-மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது