தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் இன்று கடன் மேளா சிறப்பு முகாம் நடக்கிறது
ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெறுகிறது
தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களில் இன்று கடன் மேளா சிறப்பு முகாம் நடக்கிறது. கூட்டுறவுத் துறையின் கீழ் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு நிறுவனங்களில் சுய உதவி குழு கடன்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன்கள், விதவை கடன்கள், டாம்கோ, தாட்கோ மற்றும் டாப் செட்கோ கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.பொதுமக்கள் அனைவரும் தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் அல்லிநகரம் கிளை, போடி கிளை, கம்பம் கிளை, உத்தமபாளையம் கூட்டுறவு நகர வங்கி, பெரியகுளம் கூட்டுறவு நகர வங்கி, ஆண்டிபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சின்னமனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், காமயகவுண்டன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் ஆகிய நிறுவனங்களில் இன்று (அக். 23) கூட்டுறவு கடன் மேளா சிறப்பு முகாம் நடக்க உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில் கடன்கள் தேவைப்படுவோர் கலந்து கொண்டு பயனடையலாம் என தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் ஆரோக்கிய சுகுமார் தெரிவித்தார்.