தேனி மாவட்டம், வருஷநாடு அருகே சீலமுத்தையாபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 53; இவருக்கு, இரு தம்பிகள் உள்ளனர்.சகோதரர்கள் மூவரும், அடுத்தடுத்துள்ள அவர்களின் நிலங்களில் விவசாயம் செய்தனர். பெருமாளுக்கு சொந்தமான நிலத்தில், தனக்கும் பங்கு இருப்பதாக கூறி, அவரது இளைய தம்பி அய்யனார், 24, தகராறு செய்து வந்தார்.இந்நிலையில், பெருமாளும், அவரது மூத்த தம்பி மலைச்சாமியும், இருசக்கர வாகனத்தில் தோட்டத்திற்கு நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அய்யனார், பெருமாள் தலையின் பின்பக்கம் மண்வெட்டியால் திடீரென தாக்கினார். இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். தட்டிக்கேட்ட மலைச்சாமியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. வருஷநாடு போலீசார், அய்யனாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.