வாணியம்பாடி அருகே காட்டாற்றில் கடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள்

வாணியம்பாடி அருகே எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் பாலாற்றை கடந்து செல்லும் நிலை!

Update: 2024-10-24 09:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே எதிர்கொள்ளும் ஆபத்தை உணராமல் பள்ளி மாணவர்கள் பாலாற்றை கடந்து செல்லும் நிலை! திருப்பத்தூர் மாவட்டத்தில் சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது இந்நிலையில் நீர்நிலைகள் உயர்ந்து வருகின்றது இரவு விடிய விடிய பெய்த கனமழையால் வாணியம்பாடி பாலாற்றில் நீர் வரத் தொடங்கியது மாவட்ட ஆட்சியர் தர்பகராஜ் பெய்து வரும் கன மழையால் நீர்நிலைகள் உயர்ந்து வருகின்றது இதனால் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் குழந்தைகள் நீர் நிலைகளில் அருகில் செல்வதோ விளையாடுவதோ செல்லக்கூடாது என்று அறிவுரை கூறியுள்ளார் வடகிழக்கு பருவமழை குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் இன் நிலையில் வாணியம்பாடி அருகே உள்ள பாலாற்றில் எதிர்கொள்ள ஆபத்து உணராமல் பள்ளி மாணவ மாணவிகள் பாலாற்றில் காற்றாட்டு வெள்ளத்தில் கடந்து செல்கின்றனர் இதைக் குறித்து பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் உயிர் சேதம் ஏர்ப்படுவதற்குள் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் உடனே நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கின்றனர்

Similar News