ஜோலார்பேட்டை தொகுதியில் மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

புதுப்பேட்டை ஊராட்சியில் உங்களை தேடி உங்கள் ஊரில் கள ஆய்வு ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார்

Update: 2024-10-24 09:33 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு மேற்கொண்டார் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டரம்பள்ளி அடுத்த புதுப்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட அமனங்கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தர்பகராஜ் கள ஆய்வு மேற்கொண்டார் அப்போது புதுப்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு முறையான மருத்துவம் அளிக்கப்படுகின்றத என்றும் தின குறிப்பேடுகளை ஆய்வு மேற்கொண்டார் பின்னர் வார சந்தைகயில் கள ஆய்வு மேற்கொள்ளும் பொழுது மண்பாண்ட தொழிலாளியிடம் மண்பாண்ட பொருட்கள் செய்ய களிமண் எளிதில் கிடைக்கிறதா என்று கேட்டறிந்தார் பின்னர் அங்கன்வாடி பள்ளிக்கு சென்று தரையில் அமர்ந்து பிள்ளைகளில் கற்றல் திறனை குறித்து ஆய்வு மேற்கொண்டார் மகளிர் சுயஉதவி குழு இடம் சென்று சுயதொழில் செய்யவதற்கு வங்கியில் கடன் கிடக்கின்றதா என்றும் சுயஉதவி குழு பெண்களிடம் போன் மூலம் தொடர்பு கொண்டு வங்கி கடன் குறித்து பேசினார் சுய உதவி குழு மூலம் தயாரித்த தரைவிரிப்பு கைவினை பொருட்கள் குறித்து கேட்டறிந்தார் பின்னர் அரசு துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தில் சமைக்கப்படும் உணவு தரம் குறித்து கேட்டறிந்தார் பின்னர் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் மற்றும் நியாவிளை கடைகளில் கள ஆய்வு மேற்கொண்டார் இந்த நிகழ்ச்சியில் துறை சேர்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Similar News