திருப்பத்தூரில் அமைச்சர் பங்கேற்பு
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் குறை தீர்வு கூட்டத்தில் அமைச்சர் பங்கேற்பு;
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொது மக்களின் மனுக்களை பெற்று காது கேளாதவருக்கு காது கேட்கும் கருவியை அனிவித்த விட்ட அமைச்சர் எவ. வேலு. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எவ. வேலு கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார் அப்போது மாடப்பள்ளி பகுதியை சேர்ந்த ஏகாம்பரம் என்பவர் காது கேட்டு கருவி கேட்டு மனு அளித்திருந்தார். இந்த மனுவை பெற்ற அமைச்சர் உடனடியாக அந்த நபருக்கு காது கேட்கும் கருவியை அவருடைய காதில் மாட்டிவிட்டு சரியாக கேட்கிறதா எனவும் கேட்டறிந்தார். அதேபோல் செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் மூன்று நபர்களுக்கு தொழிலாளர் நலத்துறை சார்பில் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள் இரண்டு நபர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் மற்றும் முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை மாநில அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார். இந்நிகழ்வுகளின் போது மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என் அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள் தேவராஜ், வில்வநாதன், நல்லதம்பி உள்ளிட்ட துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.