வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை.
வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சாதனை.
சேலம் சகோதயா சார்பில் நோட்ரிடேம் பள்ளியில் மாவட்ட அளவில் சிலம்பம் போட்டிகள் நடைபெற்றன. ஏறத்தாழ 35க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்ட, 17 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான வாள்வீச்சுப் போட்டியில் மல்லூர் வீ.ஜி விகாஸ் பப்ளிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயிலும் R. விகாஷ் சௌத்ரி, S. மகாஸ்ரீ ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர். 14 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான வாள்வீச்சுப் போட்டியில் R.T.அஞ்சனாஸ்ரீ, இரண்டாமிடமும், S.யாக்சினி, K. அனந்தகிருஷ்ணன், K. C.ஸ்ரீபூவரசன் ஆகியோர் மூன்றாமிடமும் பிடித்து சாதனை படைத்தனர். பரிசு பெற்ற மாணவர்களைப் பள்ளியின் முதன்மைச் செயல் அலுவலர் திருநாவுக்கரசு, நிர்வாக அலுவலர் வினோத்குமார் மற்றும் பள்ளியின் முதல்வர் கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.