நாமக்கல் : முருகன் கோயில்களில் கந்த சஷ்டி பெருவிழா தொடக்கம்!

சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கையில் மஞ்சள் நிற கயிறை காப்பு கட்டி சுவாமியை தரிசித்தனா்.

Update: 2024-11-02 09:22 GMT
கந்த சஷ்டி பெருவிழா தொடக்கத்தை முன்னிட்டு, நாமக்கல் சுற்று வட்டாரத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.நாமக்கல் சுற்று வட்டாரத்தில் கந்த சஷ்டி பெருவிழா அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. இந்த விழாவையொட்டி, ஒரு வாரத்திற்கு பக்தா்கள் விரதமிருந்து முருகனை வழிபடுவா். நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள பாலதண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி விழா தொடங்கியதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. அதன்பிறகு, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.சஷ்டி விரதம் மேற்கொள்ளும் பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசித்தனா். இதேபோன்று, நாமக்கல் - சேலம் சாலை கருமலை அடிவாரத்தில் உள்ள தண்டாயுதபாணி கோயில்,கடைவீதி சுப்பிரமணிய சுவாமி கோயில்,சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோயில், கூலிப்பட்டி பாலதண்டாயுதபாணி சுவாமி, மோகனூா் காந்தமலை முருகன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு கோயில்களிலும் சஷ்டி விழா தொடங்கியதை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

Similar News