மடத்துக்குளம் அருகே தேனீக்கள் கொட்டியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதி-ஏழு பேர் காயம்
கடத்தூர்
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் திருக்கோவில் அருகில் வயலில் களையெடுக்க சென்றவர்களை அப்பகுதியில் மரத்தில் இருந்த மலை தேனீக்கள் பறந்து வந்து கொட்டியது.. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை மீட்டு மடத்துக்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அதில் கன்னியாத்தாள், லட்சுமி ஆகிய இருவர் அதிகமான தேனீக்கள் கொட்டியதில் அதிக பாதிப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.. இதில் ஜோதி, மாரியாத்தாள், அமுதா உள்ளிட்ட 7 பேரும் குறைவான காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. ஏற்கனவே இதே பகுதியில் ஓராண்டுக்கு முன்பு சோலைமுத்து என்பவரை தேனீக்கள் கொட்டியதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது..