சேந்தமங்கலம் தொகுதி திமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்!
சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அயராது உழைக்க வேண்டும்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம் சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதி கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பி எல் ஏ பி உட்பட நிர்வாகிகள் கூட்டம் சேந்தமங்கலம் ஐஸ்வர்யா மகாலில் நடைபெற்றது.நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி தலைமை தாங்கினார்.கூட்டத்தில் ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கே.பொன்னுசாமி, தொகுதி பொறுப்பாளர்கள் நன்னியூர் ராஜேந்திரன், ரேகா பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி பேசுகையில்.. 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டியில் சில மாற்றங்களை செய்ய வேண்டும். வரும் 28ம்தேதி வெளியிடப்படும் வாக்காளர் பட்டியலை சரி பார்த்தல், புதிய வாக்காளர்களை சேர்த்தல், விடுபட்ட வாக்காளர்களை சேர்த்தல், இறந்த வாக்காளர்களை நீக்க வேண்டும் உள்ளிட்ட பணிகளை செய்து முடிக்க வேண்டும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற அயராது உழைக்க வேண்டும்.மேலும், இந்த தொகுதியில் உள்ள குறைகளை தெரியப்படுத்துங்கள், அந்த குறைகளை தொகுதி பார்வையாளர் ரேகா பிரியதர்ஷினியிடம் பதிவு செய்து அதை தலைமைக்கு தெரியப்படுத்தவார். இவ்வாறு அவர் பேசினார்.இந்த கூட்டத்தில் சேந்தமங்கலம் ஒன்றிய கழகச் செயலாளர் அ.அசோக்குமார் வரவேற்புரை ஆற்றினார்.கூட்டத்தில் மாவட்ட கழகத் துணைச் செயலாளர் ராணி பெரியண்ணன், ஒன்றிய கழகச் செயலாளர்கள் நாமகிரிப்பேட்டை கே.பி.இராமசுவாமி, எருமப்பட்டி பாலசுப்பிரமணியம்,கொல்லிமலை செ.செந்தில்குமார், பேரூர்கழக செயலாளர்கள் என்.தனபால், என்.செல்வராஜ், பி.ஜெயக்குமார், கே.அன்பழகன்,பழனியாண்டி, முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கு.காளியப்பன், பவுத்திரம் கண்ணன், பூவராகவன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜோதிலட்சுமி, மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் சி.விஸ்வநாத், துணை அமைப்பாளர் கலைவாணன், வழக்கறிஞர் அணி ஆனந்த்பாபு மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள், பிஎல்ஏ 2 நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.