திமுக சாதனைகளை திண்ணைப் பிரச்சாரங்கள் மூலம் பொதுமக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் !-நாமக்கல் தொகுதி பூத் கமிட்டி கூட்டத்தில் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வேண்டுகோள்

நவம்பர் 6 முதல் 14-ஆம் தேதி வரை, கிராமம், பேரூர், நகரம், மாநகரம் வாரியாக சென்று தொகுதி பொறுப்பாளர்கள் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்வர்.

Update: 2024-11-05 12:32 GMT
நாமக்கல் கிழக்கு மாவட்டம் நாமக்கல் சட்டமன்றத் தொகுதி கிளை செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் பி எல் ஏ பி உட்பட நிர்வாகிகள் கூட்டம் நாமக்கல் - திருச்சி சாலையில் உள்ள நளா ஹோட்டலில் நடைபெற்றது. நாமக்கல் தெற்கு நகர செயலாளர் ராணா ஆனந்த் வரவேற்றார். கூட்டத்தில் ஆதிதிராவிடர் நல துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ. இராமலிங்கம், தொகுதி பொறுப்பாளர்கள் முனவர்ஜான்(நாமக்கல்) நன்னியூர் ராஜேந்திரன்(ராசிபுரம்) ரேகா பிரியதர்ஷினி (சேந்தமங்கலம்), மாவட்ட அவைத்தலைவர் சி.மணிமாறன்,நாமக்கல் மாநகராட்சி மேயர் து.கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் தலைமைதாங்கி பேசுகையில்.... தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும், திமுக தலைமை நிலைய உத்தரவின் பேரில் பாக முகவர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உள்பட்ட மூன்று தொகுதிகளில் தற்போது கூட்டம் நடைபெற்றுள்ளது. தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். நவம்பர் 6 முதல் 14-ஆம் தேதி வரை, கிராமம், பேரூர், நகரம், மாநகரம் வாரியாக சென்று தொகுதி பொறுப்பாளர்கள் நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை மேற்கொள்வர். தமிழ்நாடு அரசு கடந்த மூன்று ஆண்டுகளில் மேற்கொண்ட திட்டங்களை மக்களிடையே எடுத்துச் செல்ல வேண்டும். திண்ணைப் பிரசாரம் மற்றும் துண்டுபிரசுரம் வாயிலாக, ஒவ்வொரு வீடாக சென்று மக்களிடையே அரசு திட்டங்களை விளக்கி கூற வேண்டும். நாமக்கல் வந்த தமிழக முதல்வர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். சென்னையை அடுத்து நாமக்கல்லில் கருணாநிதிக்கு பிரமாண்ட சிலை அமைத்ததை பாராட்டினார். புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து அவர் பார்வையிட்டார். முதல்வரிடம் அளித்த கோரிக்கைகளில், நான்கு கோரிக்கைகளை நிறைவேற்றி அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்போடு கட்சியினர் அனைவரும் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்றார். கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் பார்.இளங்கோவன், ப.ராணி, இரா.நக்கீரன், சி.ஆனந்தகுமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் நாமக்கல் வி.கே.பழனிசாமி, மோகனூர் பெ.நவலடி, புதுச்சத்திரம் எம்.பி.கௌதம், ரா.ஜெயபிரகாஷ், நகரக் கழகச் செயலாளர் ராணா ஆனந்த், எஸ். பூபதி, அ.சிவக்குமார், பேரூர் கழக செயலாளர்கள் சி.செல்லவேல், தலைமைச் செயற்குழு உறுப்பினர் டாக்டர் இரா.மாயவன், பொதுக்குழு உறுப்பினர்கள் சரவணன், கண்ணன், சுசி மற்றும் ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள், கிளைக் கழகச் செயலாளர்கள், பிரதிநிதிகள், பி எல் ஏ 2 நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.நாமக்கல் கிழக்கு மாவட்ட துணை செயலாளர் நலங்கிள்ளி நன்றி கூறினார்.

Similar News