தேனி அருகே பழனிசெட்டிப்பட்டியில் முல்லைப் பெரியாற்றுங்கரையோரம் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு அணை கருப்பணசாமி திருக்கோயில் அமைந்துள்ளது இந்த திருக்கோயில் வளாகம் தற்போது மது பிரியர்களின் கூடாரமாகவும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்களின் இடமாகவும் மாறி உள்ளதாக சிவசேனா கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர் திருவிழா காலங்களில் ஏராளமான பொதுமக்கள் இந்த பகுதிக்கு வருகை தந்து கருப்பணசாமியை வணங்கி தங்களது நேர்த்தி கடனை செலுத்தி வருவது வழக்கம் மற்ற நாட்களில் ஒரு சிலர் மட்டுமே இந்த கோவிலுக்கு வருவதால் தற்போது இந்தப் பகுதி மது பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது தமிழக அரசு தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களும் மற்றும் மதுபானங்களும் இப்பகுதியில் கிடைத்ததாகவும் இதனால் இப்பகுதி முழுவதும் போதை நபர்களின் கூடாரமாக மாறி உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர் மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் தாமோதரன் என்கிற இளைஞரை மர்ம நபர்கள் மதுபோதையில் அடித்துக் கொலை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அச்சத்துடனே வரும் நிலை ஏற்பட்டுள்ளது மேலும் கோவிலுக்கு அருகே பழனிசெட்டிபட்டி காவல் நிலையம் இருந்தும் போதை ஆசாமிகள் எந்தவித அச்சமும் இன்றி இருப்பதாக தெரிவிக்கின்றன எனவே கோயில் வளாகத்தை மதிப்பியர்களின் கூடாரமாக மாற்றுவதை தடுக்க வேண்டும் என்றும் இளைஞரை கொலை செய்த மர்ம நபர்கள் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தேனி மாவட்ட சிவசேனா கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர்