காமராஜ் நகர் பகுதியில் விவசாய கிணற்றில் பணியின் போது தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
காமராஜ் நகர் பகுதியில் விவசாய கிணற்றில் பணியின் போது தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
திருப்பத்தூர் மாவட்டம் காமராஜ் நகர் பகுதியில் விவசாய கிணற்றில் பணியின் போது தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெரியகசிநாயக்கன் பட்டி பகுதியை சேர்ந்த கைலாசம் இவரது மகன் சம்பத் வயது 58 இவர் கூலி வேலை செய்து வருகின்றார் இந்நிலையில் இன்று காலை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த சண்முகம் இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் பக்கவாட்டில் உள்ள செடி, கொடிகள் , மரங்களை,அகற்ற சம்பத்தை அழைத்து சென்று கிணற்றில் இறக்கி அப்புற படுத்தும் பணியில் ஈடுபடுத்தி உள்ளார் அப்போது சம்பத் பணியின்போது நிலை தடுமாறி கிணற்றில் விழுந்து மூழ்கி உள்ளார் உடனடியாக அப்பகுதியில் உள்ளவர்கள் சம்பத்தை மீட்டு திருப்பத்தூரில் உள்ள அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர் அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே வரும் வழியில் இறந்து விட்டதாக கூறி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் இதை குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்