குட்டக்கடை-வாகன தணிக்கையில் காரில் கடத்தி வந்த ரூ ஒரு லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் காருடன் பறிமுதல்.

குட்டக்கடை-வாகன தணிக்கையில் காரில் கடத்தி வந்த ரூ ஒரு லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் காருடன் பறிமுதல்.

Update: 2024-11-13 10:13 GMT
குட்டக்கடை-வாகன தணிக்கையில் காரில் கடத்தி வந்த ரூ ஒரு லட்சம் மதிப்பிலான போதை பொருட்கள் காருடன் பறிமுதல். கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கரூர்- ஈரோடு சாலையில் குட்டக்கடை பகுதியில், நவம்பர் 13ஆம் தேதி இரவு 12.30 மணி அளவில் நெடுஞ்சாலை ரோந்து காவலர்கள் ஆண்டனி, இளங்கோ, தீனதயாளன் ஆகியோர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக, நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, ஆண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த தேவா என்கிற தேவராஜ் வயது 42 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டிஎன் 66 பி 6212 என்ற எண் கொண்ட டாட்டா இண்டிகோ என்ற காரை தடுத்து நிறுத்தி சோதனை யிட்டனர். சோதனையில் அந்த காரில் ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிலான 120 ஆன்ஸ் பாக்கெட்டுகள், 10 கிலோ கூல் லிப் பாக்கெட்டுகள், 17 கிலோ விமல் பான் மசாலா பொருட்கள் என மொத்தம் 147- கிலோ எடை கொண்ட போதைப் பொருட்களை காருடன் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் கடத்தி வந்த தேவா என்கிற தேவராஜ் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். வாகன தணிக்கையில் சிறப்பாக செயல்பட்டு, கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்த காவலர்களுக்கு மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா பாராட்டு தெரிவித்தார். மேலும், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை எவரேனும் விற்பனை செய்தால், மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தொலைபேசி எண்ணான 9442149290 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News