திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தீர்வு நாள் கூட்டம்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் தீர்வு நாள் கூட்டம்

Update: 2024-11-29 10:31 GMT
திருப்பத்தூர் மாவட்டம் பாரம்பரிய நெல் வகையான கருப்பு கவுனி நெல் வகைகள் அதிகப்படியான விளைச்சலைப் பெருக்க மானிய விலையில் நெல் விதைகளை வழங்க விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம் ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது இந்த விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் பங்கேற்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் அப்போது விவசாயி ஒருவர் பேசுகையில் தென்னை மரம் ஒரு குழந்தை போல் வளர்த்து வருகின்றோம் ஆனால் தென்னையில் பூச்சு மற்றும் நோய் தாக்குகிறது இலையின் அடி பாகத்தில் வெள்ளை பூச்சி தாக்கி இலைகள் காய்கின்றது. அதுமட்டுமின்றி குருத்து பூச்சி தாக்கி தென்னை குறுத்துக்கள் சாய்ந்து தென்னை மரம் காய்ந்து விடுகின்றது என்று பேசினார் அப்போது வேளாண்மை திட்ட இயக்குனர் பேசுகையில் குருத்து பூச்சி மற்றும் வேர் பாகங்களில் தாக்கும் வண்டுகள் மற்றும் வேர் புச்சிகளை அளிக்க வழிமுறைகளை குறித்து விளக்குவுறை அளித்தார் பாரம்பரியமான நெல் வகையில் ஒன்றான கருப்பு கவுணி நெல்வகைகள் முக்கியமானதாக திகழ்ந்து வருகின்றது இது முற்றிலும் அழிந்து வருகின்றது அதை உயிருடி பெருக்கும் வகையில் மானிய விலையில் விதைகளை வழங்கி நெல் உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைத்தனர் கரும்பு அறுவடைக்கு தயாராக உள்ளது கரும்பை அறுவுடை செய்து அரவை மில்லுக்கு செல்லும் வாகனங்களுக்கு இலவச கட்டனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மின் இணைப்பு வழங்க கோரியும் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும், மயிகள் விவசாய நிலத்தில் முட்டையிட்டு பயிர்களை சேதம் படுத்துவதை குறித்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை குறித்து பேசினார் இறுதியில் விவசாய நிலங்களில் களை எடுக்கும் மினி இயந்திர டிராக்டர் மானியவிலை இரு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வேளாண்மை துறை வருவாய் துறை தீயணைப்பு துறை வன துறை.உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர் முன்னூருக்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Similar News