திருப்பத்தூர் பகுதியில் பெய்துவரும் லேசான மற்றும் மிதமான மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
திருப்பத்தூர் பகுதியில் பெய்துவரும் லேசான மற்றும் மிதமான மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பகுதியில் பெய்துவரும் லேசான மற்றும் மிதமான மழையால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!. கொட்டும் மழையில் ஐஸ்கிரீம் சாப்பிடும் வாலிபர்கள்!. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, ஏலகிரிமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் பகல் 12 மணி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதிய நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் திருப்பத்தூரை சுற்றியுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் சாலைகள் தற்போது லேசாகவும் மற்றும் மிதமான பெய்து வரும் மழையால் வெறிச்சோடி காணப்படுகிறது. லேசாக மற்றும் மிதமான பெய்து வரும் மழையிலும் மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக மழையில் நனைந்தபடி சென்று வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் வாலிபர்கள் கொட்டும் மழையிலும் ஐஸ்கிரீம் சாப்பிட்டு மழையில் நனைந்தபடி சென்றனர். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு மஞ்சள் அலட் விடுக்கப்பட்ட நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.