ஏல சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.ஒன்னரை கோடி மோசடி. கிராம மக்கள் புகார்.

ஏல சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.ஒன்னரை கோடி மோசடி. கிராம மக்கள் புகார்.

Update: 2024-12-02 09:05 GMT
ஏல சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.ஒன்னரை கோடி மோசடி. கிராம மக்கள் புகார். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா, தரகம்பட்டி பகுதியில் ஸ்ரீ முருகன் எலக்ட்ரானிக்ஸ் வேர்ல்ட் மற்றும் ஸ்ரீ முருகா சிட்ஸ் நிறுவனத்தை 10 பேர் கொண்ட குழுவினர் நடத்தி வந்தனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த இவர்கள் இயக்குனர்களாகவும், மேலாளர் மற்றும் உரிமையாளர்களாகவும் உள்ளனர். இவர்கள் கடவூர், தோகைமலை, காவல்காரன்பட்டி, பெட்டவாய்த்தலை, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களிடம், ஏல சீட்டு நிறுவனம் நடத்துவதாக கூறி நாள்தோறும், வாரம்தோறும், மாதம் தோறும் என பல நிலைகளில் பொது மக்களிடம் வசூல் செய்துள்ளனர். கடந்த ஒரு வருடமாக வசூலித்து வந்த பணத்தை சுருட்டிக் கொண்டு நிறுவனத்தை இழுத்து மூடி விட்டு தலைமறைவாகி விட்டனர். இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் இன்று சுமார் 100 பேர் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட வந்தனர். அப்போது காவல் ஆய்வாளர் முத்துக்குமார் இது கிரிமினல் தொடர்பான புகார் என்பதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்குமாறு ஆலோசனை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு பிரிவில் அனைவரும் தங்கள் புகார் மனுவை அளித்தனர். சுமார் 250க்கும் மேற்பட்டோரிடம் ரூபாய் ஒன்னரை கோடி வரை மோசடி செய்ததாக கூறப்படுகிறது. கிராம மக்கள் அளித்த புகாரை ஏற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறை சார்பில் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

Similar News