மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தா.பழூர் ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து தா.பழூர் ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர். டிச.19- அரியலூர் மாவட்டம் தா.பழூர் கடைவீதியில் தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளரும், எம் எல் ஏவுமான க.சொ.க.கண்ணன் தலைமையில் சட்டமேதை அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் இரா.அண்ணாதுரை, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், பொருளாளர் த.நாகராஜன், ஒன்றிய துணை செயலாளர் அ.இராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் எஸ்.ஆர்.தமிழ்ச்செல்வன், கோவி.சீனிவாசன், சி.கண்ணதாசன்,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் த.சம்பந்தம், அ.தங்கபிரகாசம், முனைவர் மு.முருகானந்தம், மருத்துவர் மா.சங்கர், எழிலரசி அர்ச்சுனன், தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் கிளை செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.