ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு பொது மருத்துவ முகாம்
ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு பொது மருத்துவ முகாமை ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க .சொ.க .கண்ணன் தொடங்கி வைத்தார்.;
ஜெயங்கொண்டம், டிச.9- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில், தனியார் மருத்துவமனைகள், அரியலூர் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை நடத்தும், ஜெயங்கொண்டம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் வெளிக்கொணர்வு தூய்மை பணியாளர்களுக்கான, இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சுமதி சிவகுமார், நகராட்சி ஆணையர் அசோக்குமார், மேலாளர் அன்புச்செல்வி, மருத்துவர்கள் டாக்டர்கள் சேதுமாதவன், சிவரஞ்சனி மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள், மருத்துவ பணியாளர்கள்,தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.