விக்கிரவாண்டி அருகே ஆற்றில் மூழ்கிய விவசாயி உடல் மீட்பு
போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை;
விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி அடுத்த மதுரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த், 35; விவசாயி. இவர், நேற்று முன்தினம் பிற்பகல் 3:00 மணி யளவில் தனது மகன் சுதேஷுடன், 14; தனது நிலத்திற்கு சென்று வீடு திரும்பும் போது சங்கராபரணி ஆற்றை கடந்தனர்.அப்போது ஆற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். உடன், அங்கிருந்தவர்கள் சுதேைஷ மீட்டனர்.இந்நிலையில், ஆற்றில் ஸ்ரீகாந்த் உடலை தீயணைப்பு வீரர்கள் நேற்று மீட்டனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.