ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து மயிலாடுதுறையில் கடை அடைப்பு

மத்திய, மாநில அரசுளின் வணிக விரோத போக்கை கண்டித்தும், கடைகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப்பெற வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் இன்று அரைநாள் கடைஅடைப்பு செய்து வணிகர்கள் போராட்டம். 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட கடைகள் அடைப்பு;

Update: 2024-12-11 05:42 GMT
மத்திய, மாநில அரசுகளின் வணிக விரோத போக்கை கண்டித்து மயிலாடுதுறை நகரில் இன்று சேம்பர் ஆஃப் காமர்ஸ், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் வணிகர்கள் அரைநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய அரசின் கடைகள் மீதான ஜிஎஸ்டி வரிவிதிப்பை திரும்பப்பெற வேண்டும், உள்நாட்டு வணிகத்தை சுரண்டும் ஆன்லயன் வணிகத்தை தடைசெய்ய வேண்டும்,மாநில அரசு ஆண்டுதோறும் 6 சதவிகித கூடுதல் சொத்துவரி விதிப்பை திரும்பப்பபெற வேண்டும், வணிக உரிம கட்டணம் உயர்வு, தொழில் வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும், குப்பை வரி மாநிலம் முழுவதும் ஒரே சீராக அறிவிக்க வேண்டும், மாதாந்திர மின்கட்டண அமலாக்கம் நடைமுறைப்படுத்த வேண்டும், வணிக உரிமம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் முறையை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நகரில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை கடைகளை அடைத்துள்ள வணிகர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி விஜயா திரையரங்கம் சாலையில் காலை 11 மணிக்கு கவன ஈர்ப்பு போராட்டமும் அதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கின்றனர்

Similar News