உதகையில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் .......
உதகையில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் .......;
உதகையில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் ....... நீலகிரி மாவட்டம் உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த நடை பயணத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த நடைபயணத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 100 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி நகரின் முக்கிய சாலை வழியாக சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள தேவாங்கர் மண்டபத்தில் நிறைவடைந்தது.