பல்லடம் அருகே அடையாளம் தெரியாத நபர்கள் ஊருக்குள் வர அனுமதி இல்லை பதாரைகள் வைத்த பொதுமக்கள்

பல்லடம் மூன்று பேர் படுகொலை எதிரொலி. அடையாளம் தெரியாத சந்தேகிக்கும் படியான நபர்கள் ஊருக்குள் வர தடை பதாகைகள் வைத்த கிராம மக்களால் பரபரப்பு.;

Update: 2024-12-11 15:12 GMT
.... திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையம் என்ற கிராமத்தில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி தெய்வசிகாமணி, அலமேலு மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகிய மூன்று பேர் நள்ளிரவில் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் 14 தனி படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கொலை நடந்து 14 நாட்கள் ஆகியும் சிசிடிவி காட்சிகள்,செல்போன் சிக்னல்கள் ஆகியவை கிடைக்காததால் இதுவரை துப்பு துலங்காததால் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். புலம்பெயர் தொழிலாளர்களிடம் கைரேகை மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை சேகரிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கண்டியன்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட சேமலைகவுண்டம்பாளையம், மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் கண்டியன் கோவில் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே பதாகைகள் வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் ஊருக்குள் வசிப்பவர்களும் தோட்ட சாலையில் வசிப்பவர்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் அந்த பதாகைகள் இடம்பெற்றுள்ளது. அடையாளம் தெரியாத நபர்கள் ஊருக்குள் நுழைய தடை எனவும்,அடையாளம் தெரியாத நபர்களை வைத்து வீடு மராமத்து பணிசெய்வதையும், கிணறுகளை தூர்வாரும் பணி செய்வதையும் தவிர்ப்போம் எனவும், பழைய துணி வாங்குபவர்கள் பெட்ஷீட், போர்வை விற்பனை செய்பவர்கள், பழைய இரும்பு பொருள் வியாபாரம் செய்பவர்கள்,வளையல் விற்பனை செய்பவர்கள் நன்கொடை வசூலிக்கிறோம் என்ற பெயரில் வரும் நபர்கள் என யாரும் ஊருக்குள் வர தடை எனவும் தோட்டத்தில் குடியிருப்பவர்கள் சாலையோரம் உள்ள பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த அனைவரும் முன்வர வேண்டும் எனவும், இரவு நேரங்களில் யாராவது கதவைத் தட்டினால் விசாரிக்காமல் கதவை திறக்க வேண்டாம் எனவும், பகல் இரவு நேரங்களில் சந்தேகம் படியான நபர்கள் யாராவது ஊருக்குள் இருந்தால் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் எனவும், அவசர தொலைபேசி எண் 100க்கு அழைக்கவும் எனவும், ஒவ்வொரு தற்காப்பு ஆயுதங்களும் நமக்கு பேராயுதம் என்ற முன்னோர்கள் வழியில் நாமும் பயணிப்போம் என கண்டியன்கோவில் கிராம பொதுமக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் ஊரின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே பதாகை வைக்கப்பட்டுள்ளது... மேலும் இப்பகுதியில் ரைஸ் மில் தேங்காய் களம் பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வரும் நிலையில் கண்டியங்கோவில் ஊராட்சிக்குட்பட்ட கிராம பகுதிகளில் இது போன்ற பதாகைகள் வைக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொலை சம்பவத்திற்கு பிறகு கண்டியன் கோவில் ஊராட்சியில் முக்கிய பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் முழு வீச்சில் குற்றவாளிகளை படிப்பதற்கு செயல்பட்டாலும் இரவு நேரங்களில் கால்நடைகளுக்கு தீவனம் செலுத்துவதற்கும், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ப்பதற்கும் விவசாய பணிகளை மேற்கொள்வதற்கும் வெளியே வர முடியாமல் அச்சத்தோடு வாழ்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News