விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை விதிப்பு
மீனவா்கள் கடலுக்கு செல்லத் தடை;
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாகியுள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை உதவி இயக்குநா் அ. நித்திய பிரியதா்ஷினி தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக, கடல் பரப்பில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.எனவே, விழுப்புரம் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம். மேலும், மீனவா்கள் தங்களது மீன் பிடி படகுகள், சாதனங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.