முத்தூரில் சைக்கிள் மீது கிரேன் மோதி முதியவர் படுகாயம்

முத்தூரில் சைக்கிள் மீது கிரேன் மோதி முதியவர் படுகாயம். வெள்ளகோவில் காவல்துறை விசாரணை;

Update: 2024-12-13 00:06 GMT
முத்தூர் வேலம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காங்கேயம்பாளையத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 64). முதியவரான இவர் நேற்று முன்தினம் மாலை முத்தூர் காங்கேயம் சாலை செண்பகம் நகர் தனியார் மில் அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வெள்ளகோவில் சேர்ந்த மாதவன் என்ற டிரைவர் ஓட்டி வந்த கிரேன் வாகனம் திடீரென்று எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பழனிச்சாமியை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் முத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இது பற்றிய புகாரின் பேரில் வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News