நஞ்சியம்பாளையத்தில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்

நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம்;

Update: 2024-12-13 00:28 GMT
தாராபுரத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு ஆணைப்படி தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு சார்பில் விதான் சி சமதான் என்ற பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் தாராபுரம் நஞ்சியம்பாளையம் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தாராபுரம் வட்ட சட்ட பணிக்குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சக்திவேல் தலைமை தாங்கினார். முகாமில் தாராபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் சுதா பேசுகையில் தற்போது பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமை பற்றியும், அதை தைரியமாக பெண்கள் வெளிப்படுத்த வேண்டும் என கூறினார். தாராபுரம் அனைத்து மகளிர் காவல் உதவி ஆய்வாளர் மண்டோதரி கூறுகையில் போக்சோ என்ற குற்றமே பெரிய அளவில் பெருகி வருகிறது இதை தடுக்க முன்வர வேண்டும், அருகில் உள்ள காவல் நிலையம் அல்லது 1098 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்றார். தாராபுரம் வழக்கறிஞர் கே.சகுந்தலா கூறியது பெண்களுக்கான சட்டம் பற்றியும், இலவச சட்ட உதவி மையம் செயல்பாடு பற்றியும் கூறினார். தாராபுரம் வழக்கறிஞர் பி.சசிகலா பேசுகையில் பெண் உரிமைகள் பற்றியும் தேசிய மகளிர் ஆணையம் செயல்படுவது பற்றியும், பெண்களுக்கு உள்ள அரசு திட்டங்கள் பற்றியும் கூறினார். நஞ்சியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிகாந்த் வரவேற்றார். தாராபுரம் வட்ட சட்டப் பணிக்குழு தன்னார்வலர் கோகுலவாணி இலவச சட்ட சேவை எண் 15100 என்ற எண் பற்றியும் தெரிவித்து நன்றி கூறினார்.

Similar News