சிவன்மலையை தைப்பூச தேர்த்திருவிழா முகூர்த்தக்கால் பூஜை

காங்கேயம் அருகே சிவன்மலையில் தைப்பூச தேர் திருவிழாவையொட்டி முகூர்த்தக்கால் பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2024-12-13 03:24 GMT
காங்கேயம் அடுத்த சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூச தேர்த் திருவிழாவும் ஒன்று.  இந்த ஆண்டுக்கான தைப்பூச தேர்த்திருவிழா இந்த கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நேற்று காலை சிவன்மலை அடிவாரத்தில் உள்ள தேரில் முகூர்த்தக்கால் பூஜை நடைபெற்றது. சிவன்மலை அடிவாரத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட தேரில் முகூர்த்த கல் பூஜை நடத்தப்பட்டது. பூஜையின் போது சுப்பிரமணிய சுவாமி கையில் இருக்கும் பராசக்தியின் வேல் மலையடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு படி வழியாக கொண்டுவரப்பட்டது. அப்போது கோவில் சிவாச்சாரியார்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்த காலில் புனித நீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்களப் பொருட்கள் அணிவிக்கப்பட்டும் தேரை சுற்றிலும் முகூர்த்தங்கள் நட்டு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வழிபட்டனர்.

Similar News