திம்பத்தில் சிறுத்தை நடமாட்டம் வாகன ஓட்டிகள் பீதி
திம்பத்தில் சிறுத்தை நடமாட்டம் வாகன ஓட்டிகள் பீதி;
திம்பத்தில் சிறுத்தை நடமாட்டம் வாகன ஓட்டிகள் பீதி சத்தியமங்கலம், வனக்கோட்டம், திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்டது . மலைப்பாதை வழியாக வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென சிறுத்தை புலி ஒன்று, ரோட்டை கடந்து, வனத்துக்குள் ஓடிச் சென்று மறைந்தது. சிறுத்தை புலியை பார்த்தவுடன் மிரண்டு போன வாகன ஓட்டிகள், மொபைல் ஃபோன்களில், ஃபோட்டோ பிடித்தனர். இதுபற்றிய தகவல் பரவியதால், திம்பம் மலைப்பாதை வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பீதியடைந்துள்ளனர்.