திருப்பத்தூர் அருகே மின்சார ஊழியர் உயிரிழப்பு

திருப்பத்தூர் அருகே மின்சார ஊழியர் உயிரிழப்பு அவருடைய பணியை மக்களுக்கு வழங்க கோரிக்கை;

Update: 2024-12-14 09:08 GMT
திருப்பத்தூர் மாவட்டம் மட்றப்பள்ளி துணை மின் நிலைய மின் பாதை ஆய்வாளர் கீழே விழுந்து காயம் இரண்டு மாதங்களாக சிகிச்சையிலிருந்து உயிரியிழப்பு!..அந்த வேலையை மகளுக்கு வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை* திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த தாதனவலசை பகுதியைச் சேர்ந்த வேலு (51) இவர் மட்றப்பள்ளி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் 13 வருடங்களாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பணி முடிந்து வீடு திரும்பும் போது இரவு நேரத்தில் கீழே விழுந்து கையை உடைத்து கொண்டதாக தெரிகின்றது இதன் காரணமாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் இரண்டு மாதங்களாக சிகிச்சையிலிருந்து வந்துள்ளார் இந்த நிலையில் 90 சதவீதம் குணமடைந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு நேற்று மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்பின்னர் சிகிச்சையில் இருந்த வேலு திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் கிராமிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு பிரேத பரிசோதனை செய்ய ஆவணம் பெற வந்த உறவினர்கள் காவல் நிலையத்திலேயே கத்தி கதறி அழுதனர். மேலும் உயிரிழந்த வேலூவின் மின்பாதை ஆய்வாளருக்கான வேலையை அவருடைய மகளான தனலட்சுமிக்கு கொடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Similar News