ராஜீவ் நகரில் குப்பைகளுக்கு நகராட்சி ஊழியர்களை தீ வைப்பதாக குற்றச்சாட்டு

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட ராஜீவ் நகர் பகுதியில் பொதுமக்களிடம் தரப்படும் குப்பைகளுக்கு அங்கேயே குட்டி பிவி நகராட்சி ஊழியர்கள் மீது பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்;

Update: 2024-12-14 14:51 GMT
காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 3வது வார்டு பகுதியான ராஜிவ் நகரில் குப்பைகளுக்கு தீ வைத்து நகராட்சி ஊழியர்களே அழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இதுபோல் தீ வைப்பதால் புகை மண்டலங்கள் பரவி பொதுமக்களுக்கு மூச்சு விட முடியாத சூழல் ஏற்படுவதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் பலமுறை இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மேலும் இது குறித்து குற்றச்சாட்டு நிலையில் தற்போது குப்பைகளை பெறுவதற்கு நகராட்சி மூலமாக ஒப்பந்தம் எடுக்கப்பட்ட தொழிலாளிகள் இந்த பகுதிக்கு வரவில்லை எனவும் புகார் தெரிவிக்கின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News