காங்கேயத்தில் காய்ந்து விழ காத்திருக்கும் பழமையான மரம்
காங்கேயம் திருப்பூர் சாலையில் காய்ந்து விளக்காத்திருக்கும் பழமையான மரம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை;
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திருப்பூர் சாலையில் பல வருடங்கள் பழமையான மரம் ஒன்று காய்ந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் மழை மற்றும் காற்றின் காரணமாக முறிந்து விளக்கு கூடும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த மரம் அமைந்துள்ள சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள, வணிக வளாகங்கள் தினசரி கடைகள் அதிகம் இயங்கி வரும் சாலை ஆகும். எனவே முன்னெச்சரிக்கையாக காய்ந்த மரம் விழுந்து அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் அகற்றினால் விபத்துக்கள், போக்குவரத்து நெரிசல் போன்றவற்றை தடுக்கலாம் என வாகன ஓட்டிகள் மற்றும் சமூக அலுவலர்கள் இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.