கோவிலுக்கு செல்ல மின்விளக்கு வசதி அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவருக்கு பாராட்டு
கோவிலுக்கு செல்ல மின்விளக்கு வசதி அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவருக்கு பாராட்டு;
கோவிலுக்கு செல்ல மின்விளக்கு வசதி அரியப்பம்பாளையம் பேரூராட்சி தலைவருக்கு பாராட்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் அருகே பவானி ஆற் றங்கரையில் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு செல்லும் பாதையில் மின்விளக்கு வசதி அமைத்து தருமாறு பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பாக அரியப்பம்பாளையம் பேரூராட்சிதலைவர் மகேஸ்வரி செந்தில்நாதனிடம் பேரூராட்சி 10-வது வார்டு கவுன்சிலர் கலைவாணி முருகன் மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து பேரூராட்சி தலைவர் நடவடிக்கை எடுத்து மின் விளக்குகள் வசதி செய்து கொடுத்தார். இதனைத்தொடர்ந்து கோவில் நிர்வாகத்தினரும், பக்தர்களும் பேரூராட்சி தலைவருக்கு சால்வை அணிவித்து பாராட்டி நன்றி தெரிவித்தனர். அப்போது பேரூராட்சி தி.மு.க. செயலாளர் வக்கீல் செந்தில் நாதன் உடன் இருந்தார்.