தாளவாடி மற்றும் ஆசனூர் மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி
தாளவாடி மற்றும் ஆசனூர் மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி;
ஆசனூர் மலைப்பகுதியில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாதபடி கடும் பனிப்பொழிவு உள்ளது. தாளவாடி மலைப்பகுதியில் கடும் பனிப்பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மற்றும் அதன் சுற்றுவட் டார பகுதிகளான ஆசனூர், தலமலை, திம்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான மூடுபனி மற்றும் குளிர் நிலவி வருகிறது. திண்டுக்கல் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான மூடுபனி காரணமாக முன்னால் செல்லும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு களை எரிய விட்டபடி சென்றனர். அதிகாலை தொடங்கிய பனி காலை 8 மணியை கடந்தும் குறையவில்லை. இந்த கடும் பனி மூட்டம் காரணமாக வாகன ஒட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகிறார்கள். மார்கழி மாதம் துவக்கத்திலேயே கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆசனூர், தலமலை, தாளவாடி, திம்பம், கேர்மாளம் சுற்று வட்டார பகுதிகளில் காணப்படும் சீதோசன நிலை ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருப்பதுபோல் உள்ளதாக வாகன ஓட்டிகள், பயணிகள் தெரிவித்தனர்