மின்வாரிய பென்சனர் சங்க தின விழா

நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம்

Update: 2024-12-18 02:20 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை மின்வாரிய பென்சனர் சங்க தின விழா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கூட்டம் வைகைநல்லூர் அக்ரஹாரம் தனியார் மகாலில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளரும் ச.து. தலைவருமான பழனிவேல் தலைமை வகித்தார். து. செயலாளர் கண்ணன் ஆண்டறிக்கை மற்றும் தீர்மானங்கள் வாசித்தார் பொருளாளர் மகாலிங்கம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். முன்னதாக புதுப்பட்டி பிச்சை குளித்தலை வேலுச்சாமி கழுகூர் சந்தானம் முன்னிலையில் பெட்டவாய்த்தலை ரத்தினகிரி கொடியேற்றினார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட குளித்தலை வட்ட தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்க தலைவர் சுந்தரமூர்த்தி மாணிக்கம் சிறப்புரை ஆற்றினார் இக்கூட்டத்தில் 2016 ல் வழங்கிய பென்ஷன் உயர்வு மத்திய மாநில அரசுகள் விரைவாக நடவடிக்கை எடுத்து உரிய கமிட்டி அமைத்து அதன் பரிந்துரை பெற்று பரிசளித்து 2026 முதல் பென்ஷன் உயர்வு வழங்க வேண்டும். பொங்கல் பண்டிகை முன்னிட்டு வழங்கி வரும் பரிசுத்தொகையினை அனைவருக்கும் உயர்த்தி வழங்க வேண்டுவதுடன் வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற அனைவருக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. விழாவிற்கான ஏற்பாட்டினை ச.தலைவர் பொன்னம்பலம் செய்திருந்தார். முடிவில் ச.செயலாளர் நரசிங்கம் நன்றி கூறினார்.

Similar News