சங்கரன்கோவில் திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் வைத்து நேற்று இரவு திமுக வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் திமுக தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தலைமையில் சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்றம் சேர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, யு,எஸ்,டி சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் தலைவர் பத்மநாதன், மாவட்ட பொருளாளர் இல.சரவணன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.