மத்திய அமைச்சரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு அம்பேத்கரை அவமதித்து பேசிய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

Update: 2024-12-20 01:33 GMT
இந்திய சட்டமேதை அண்ணல் அம்பேத்கரை அவமதித்து பேசிய ஒன்றிய நடுநிலைப்பள்ளி மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் இரா. சிசுபாலன் தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் ஏ. குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம். மாரிமுத்து, சி. நாகராசன், எம். முத்து, சோ. அருச்சுனன், வே. விசுவநாதன், ஆர். மல்லிகா, தி. வ. தனுசன், சக்திவேல், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட செயலாளர் ஏ. சேகர், இடை கமிட்டி செயலாளர்கள் தருமபுரி நகரம் ஆர். ஜோதிபாசு தருமபுரி ஒன்றியம் கே. கோவிந்தசாமி, பாலக்கோடு கார்ல் மார்க்ஸ் ஆகியோர் பங்கேற்று பேசினர். மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை விவாதம் நடைபெற்​றது. விவாதத்​தின் முடி​வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, ‘அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர்’ என முழக்​கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்​டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்​திருந்​தால், சொர்க்​கத்​தில் அவர்​களுக்கு இடம் கிடைத்​திருக்​கும். என அம்பேத்​கரை அவமதித்து பேசினார். அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்​சுக்கு கண்டனம் தெரிவித்தும் மன்னிப்பு கேட்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Similar News