வந்தவாசியில் தேசிய மின் சிக்கன வார விழா பேரணி.
முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ,தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தேசிய மின் சிக்கன வார விழா பேரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம் எஸ் தரணி வேந்தன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் இன்று கொடியசைத்து தொடக்கி வைத்தனர். நிகழ்வில் திரளானோர் கலந்துகொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.