புஞ்சைபுளியம்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை
புஞ்சைபுளியம்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை;
புஞ்சைபுளியம்பட்டியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் யார் அவர்? போலீஸ் விசாரணை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பவானிசாகர் ரோட்டில் அரசு டாஸ்மாக் மதுக்கடை அருகே ஆண் பிணம் கிடந்தது. இதைபார்த்த அந்த பகுதி பொதுமக்கள் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை பார்வையிட்டனர். பின்னர் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக சத்திய மங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். பிணமாக கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். பிணம் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதனால் உயிரிழந்து 2 நாட்கள் அல்லது 3 நாட்கள் இருக்கும். யார் அவர்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரங்கள் தெரியவில்லை. குடிபோதையில் கீழே விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.