நெல்லையில் கேரளா கழிவுகளை கொட்டிய சம்பவத்தை தொடர்ந்து பசுமை தீர்ப்பாயம் கழிவுகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. இதனை வருகின்ற ஞாயிற்றுக்கிழமைக்குள் அகற்றாவிட்டால் திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சுத்தமல்லி விலக்கில் மக்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளரும் மானூர் முன்னாள் யூனியன் சேர்மனுமான கல்லூர் வேலாயுதம் இன்று அறிவித்துள்ளார்.