பொது மக்களிடையே ரகலில் ஈடுபட்ட வாலிபர் கைது!
மதுபோதையில் மக்களிடையே வாலிபர் ரகளை
அரக்கோணம் பழனிபேட்டை, ஏ.என்.கண்டிகை, சோமசுந்தரம் நகர் ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாராயணசாமி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பழனிபேட்டை சோமசுந்தரம் நகரில் வாலிபர் ஒருவர் மது போதையில் அவ்வழியாக சென்ற பொதுமக்களிடம் ரகளையில் ஈடுபட்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து டவுன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரண மேற்கொண்டனர். அதில் அவர் அதேப்பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சாரதி (வயது 24) என்பது தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.